புது டெல்லியில் ஏற்பட்ட கோரம்! குறைந்தது 13 பேர் வரை பலி!

 indian News Tamil

புது டெல்லியில் ஏற்பட்ட கோரம்! குறைந்தது 13 பேர் வரை பலி - At least 13 people killed in stampede in New Delhi

 புது டெல்லி தொடருந்து நிலையத்தில் ஏற்பட்ட சன நெரிசலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பத்திற்காக, பயணிகள் தொடருந்தில் ஏற முற்பட்ட போது, அங்கு திடீர் நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதன்போது, 13 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



 காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நரேன் (LNJP) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


 தொடருந்து நிலையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டதால், பல பயணிகள் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.



 இதேவேளை, தனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'X'தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.




Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்