Vavuniya Tamil News
நாடாளாவிய ரீதியில் 'பிடியளவு கமநிலத்துக்கு ஒன்றிணைவோம்' நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம்(15) வவுனியா கோவில்குளம் கமநல சேவை திணைக்களத்தில் குறித்த திட்டமான ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மீண்டும் பயிர்ச்செய்கை
குறிப்பாக இலங்கையிலே பயிரிடப்படாது காணப்படுகின்ற வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களை மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளச்செய்வதனை நோக்கமாக கொண்டதாக குறித்த நிகழ்ச்சித் திட்டம் அமையப் பெற்றது.
வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபனின் தலைமையின் கீழ் இடம்பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வினை, வவுனியா மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் ஆரம்பித்து வைத்திருந்துடன், பண்டாரிக்குளம், பட்டானிச்சூர் உட்பட பல பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுககப்பட்டது.

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்-Vavuniya News
அத்துடன் பயிரிடப்படாத வயல் நிலங்கள் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளருக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.