மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது -Srilanka News Tamil

Srilanka News Tamil

மக்களை ஏமாற்றி பல மில்லியன் ரூபா பண மோசடி செய்த இருவர் கைது -Srilanka News Tamil-Two arrested for defrauding people of millions of rupees -Srilanka News Tamil


  நாட்டு மக்களை ஏமாற்றி மோசடியான முறையில் சுமார் 3 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சமூக வலைத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 28 வயதான சேனதீரகே துலான் மகேஷித மற்றும் அவருக்கு உதவிய 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர்கள் கற்பிட்டி மற்றும் நுரைச்சோலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

போலி கணக்கின் மூலம்

 லிட்டில் ஹார்ட்ஸ் என்ற போலி கணக்கின் மூலம் இந்த பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுளு்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



  போலி கணக்கின் மூலம் நன்கொடைகளை வசூலிப்பதன் மூலம் சந்தேக நபர்கள் பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் விளைவாக நேற்று இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.


Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்