Jaffna News Tamil
யாழ்ப்பாணம் (Jaffna) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.