Jaffna News Tamil
யாழ்ப்பாணத்தில், (Jaffna) கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் என்ற 85 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்போது விடத்தல்பளை, மிருசுவில் பகுதியைச் சேர்ந்த நடராசலிங்கம் புஸ்பராணி என்ற 67 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி வரை காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 11ஆம் திகதி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.