Srialnka News Tamil
2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், தற்போது வரவு செலவுத் திட்ட முன்வைப்பிற்காக நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சபைக்கு வருகைத் தந்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டமாக இது பார்க்கப்படும் நிலையில், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பொதுமக்களுக்கான கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் பாரிய எதிர்பார்ப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.