கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது..! Srilanka News Tamil

 Srilanka News Tamil

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது..! Srilanka News Tamil-Buddhist monk arrested with cannabis cigar


 தியகலை பகுதியில்  1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குலம் நீளம் கொண்ட கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இச் சம்பவம் இன்று மதியம் 4 மணிக்கு தியகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


ஹட்டன் பொலிசார் வீதித் தடை இட்டு சிவனடி பாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்த பேருந்து ஒற்றை சோதனையிட்ட போது பௌத்த பிக்குவிடம் இருந்து கஞ்சா 1360 மில்லி கிராம் கஞ்சா சுருட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.



இவ்வாறு கைது செய்யபட்டவர் 27 வயது உடைய பிக்கு எனவும் இவர் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவரை நாளை 3 ம் திகதி காலை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்