புகையிலை செடிகளுக்குள் கஞ்சா வளர்த்த கமக்காரன்; பொலிஸார் அதிரடி!

  

புகையிலை செடிகளுக்குள் கஞ்சா வளர்த்த கமக்காரன்; பொலிஸார் அதிரடி!

யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடியை வளர்த்த, 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.


சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் – தைலங்கடவை பகுதியில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.



 யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது 4 அடி 10 அங்குலம் கொண்ட கஞ்சா செடியும் மீட்கப்பட்டதுடன்சந்தேகநபர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


 மேலும் கைதானவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்