தாய்லாந்து மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று வெள்ளிக்கிழமை மதியம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தாய்லாந்து மற்றும் மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


மேலும் தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று  வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


இன்று நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் தற்போது வரை எவ்வித உயிரிழப்புக்களும் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்