மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

 

tamil lk news/மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்/Another earthquake in Myanmar today

 மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.


மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.



 டந்த வெள்ளிக்கிழமை மியன்மாரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.



 நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் மக்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்