Srilanka News Tamil
நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு இன்று (3) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உப்பு உற்பத்தி கட்டிடத்தை பார்வையிட்டுள்ளார்.
இந்தநிலையில், கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த அரசாங்கம் இவ்வாறான உற்பத்திகளை முடிவுப்பொருள் ஆக முன்பே வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது.
நாங்கள் முடிவுப்பொருளாக்கி அதிக இலாபம் ஈட்டுவதுடன் இந்தப் பிரதேசத்தைச்சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கு முடியும் என தெரிவித்தார்.