உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் பரிதாப மரணம்! Jaffna News

  Srilanka News Tamil


உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் பரிதாப மரணம்! Jaffna News -Boy dies tragically after getting trapped in a plow! Jaffna News


யாழ்ப்பாணம் (Jaffna)- சுன்னாகம் பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவமானது இன்று (3) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவத்தில் , சுன்னாகம் ஸ்கந்தவரோதயா பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய நிகால்தாசன் ஆத்வீகன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


 இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தினை பின் வளமாக வெளியே எடுக்க முயன்றுள்ளார்.



 இதன்போது, குறித்த சிறுவன் பின்னிருப்பதை கவனிக்காது  உழவு இயந்திரத்தினை எடுத்த போது அதனுள் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த சிறுவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



மேலும் ,சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்