பேருந்துடன் லொறி மோதி கோர விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

  ஹொரணை - இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.


இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர். 

பேருந்துடன் லொறி மோதி கோர விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்/Lorry collides with bus in serious accident; 15 people including school students injured


காயமடைந்தவர்களில் லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 


காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 


ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 



தனியார் பேருந்து ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில், சிறிய லொறி இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே விபத்து நிகழ்ந்துள்ளது. 



விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்