வவுனியா சென்ற கணவனை காணவில்லை; மனைவி பொலிஸில் முறைப்பாடு!

செய்திகள் #Srilanka #Vavuniya

  Srilanka News Tamil

வவுனியா சென்ற கணவனை காணவில்லை; மனைவி பொலிஸில் முறைப்பாடு!


மன்னார், பனங்கட்டு கொட்டு மேற்கு பகுதியை சேர்ந்த முருகேசு சசிக்குமார் என்ற 51 வயது குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.


கணவர் காணாமல் போனமை தொடர்பில் மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.



 குறித்த குடும்பஸ்தர் கடந்த 23 ஆம் திகதி வவுனியா சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.



 குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 0743022280, 0758320499 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்