Srilanka Tamil News
களுத்துறை - ரஜவத்தை, கமகொட பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஜவத்த - கமகொட வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் நிரப்பிய போத்தலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனால் 28 வயதுடைய பெண்ணும் 06 வயதுடைய சிறுவனும் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வவுனியாவில் இரு திருடிகள்; அவதானம் மக்களே! Vavuniya News
பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
குழந்தையின் தாய் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.