Srilanka News Tamil
வவுனியா,(Vavuniya) நகரசபைப் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஒருவரின் சங்கிலியை இரு பெண்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (30) தெரிவித்தனர்.
வவுனியா, பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை பூங்காவில் (city council park) சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது அச்சிறுமியின் அருகில் சென்ற இரு பெண்கள் சிறுமியுடன் கதைப்பது போன்று கதைத்து விட்டு சிறுமி அணிந்திருந்த சங்கிலியை அறுத்துச் சென்றதாக பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார்(Vavuniya Crime Prevention Division Police) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Vavuniya News