பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

  Srilanka News Tamil

பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் - Information released by the Minister regarding unsafe railway crossings


இலங்கை(Srilanka) முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.


அத்தோடு,  இந்த ஆண்டுக்குள் அவை அனைத்தையும் பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (07) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நமது நாட்டில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் அதிக அளவில் உள்ளன. நேற்றும் கூட, அளுத்கம பகுதியில் ஒரு முச்சக்கர வண்டி ஒரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.



 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளை அடுத்த மாதத்திற்குள் பாதுகாப்பானதாக மாற்றி வீதிப்பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.


மேலும், சிறந்த போக்குவரத்தை உருவாக்க நேரம் எடுத்தாலும், மக்களின் உயிரைப் பாதுகாக்க அவ்வளவு நேரம் எடுக்கக்கூடாது என பிமல் ரத்நாயக்க சபையில் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்