டிக்டாக் தடை, விரைவில் புதிய ரீல்ஸ் ஆப்-ஐ அறிமுகம்

 

டிக்டாக் தடை, விரைவில் புதிய ரீல்ஸ் ஆப்-ஐ அறிமுகம் - TikTok ban, new Reels app to be launched soon

 மெட்டா நிறுவனம், டிக்டாக் தடை காரணமாக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கென புதிய ஆப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆடம் மோசேரி மற்றும் குழுவினர் இதுகுறித்து விவாதித்துள்ளனர்.


உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் கொண்டுள்ள டிக்டாக் ஆப்பிற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்திருக்கின்றன. 


இதனைச் சாதகமாகப் பயன்படுத்தும் விதமாக, மெட்டா நிறுவனம் இன்ஸ்டாகிராமின் அதிகம் விரும்பப்படும் அம்சமான ரீல்ஸ் வீடியோவைப் பிரத்யேகமாகக் கொண்ட புதிய ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. 



இந்த வாரம் வெளியாகியிருக்கும் சமீபத்திய தகவல்படி, இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மோசேரி மற்றும் அவரது குழுவினர் இதுகுறித்து விவாதித்ததாகவும், அதற்கான உத்திகள் குறித்து அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 



ரீல்ஸைத் தனியாக ஓர் புதிய ஆப் மூலம் வழங்குவது குறித்து, தி இன்ஃபர்மேஷன் தனது அறிக்கையில், மொசேரியுடனான சந்திப்புகளில் பங்கேற்றவர்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்