Srilanka News Tamil
யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரை வழிமறித்து பொலிஸார் சோதனையிட்ட போது 1600 போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.