Srilanka News Tamil
மொனராகலை மாவட்டம் வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில் ஊவா குடா ஓயா பகுதியில் இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது இரண்டு லொறிகளிலும் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊவா குடா ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.