செவ்வாயின் முதல் ஒளிக்கதிர்களை பதிவு செய்த UAE-ன் ‘ஹோப்’ செயற்கைக்கோள்!

 

செவ்வாயின் முதல் ஒளிக்கதிர்களை பதிவு செய்த UAE-ன் ‘ஹோப்’ செயற்கைக்கோள்!

 ஐக்கிய அரபு எமிரேட்சின் ‘ஹோப்’ (Hope) செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுப்பப்பட்டது. 


சமீபத்தில், இந்த ஹோப் செவ்வாய் கிரக வானத்தை ஒளிரச் செய்யும் அற்புதமான ஒளிக்கதிர்களின் படங்களை பதிவு செய்துள்ளது.


அறிவியலாளர்கள் நீண்ட நாட்களாக செவ்வாயில் ஒளிக்கதிர்கள் இருப்பதை அறிவித்திருந்தாலும், 


இதுவரை அவற்றை நேரடியாகப் பதிவு செய்ய முடியவில்லை. ‘ஹோப்’இன் 


Emirates Mars Ultraviolet Spectrometer (எமிரேட்ஸ் மார்ஸ் அள்ரா வயோலெற் ஸ்பெக்ரோமீற்றர்) கருவியின் உதவியுடன், இந்த அரிய நிகழ்வை 103.4 நானோமீட்டர் (nanometers) நீளத்திலான அலைவரிசையில் பதிவு செய்ய முடிந்துள்ளது.



இவ்வளவு குறைவான அலைவரிசை காணக்கூடிய ஒளிக்கதிர்களை விட குறைவாக இருந்தாலும், X-ray கதிர்வீச்சைவிட நீண்டதாகும். எனவே, இது மனிதர்களால் காண முடியாத ஒளிக்கதிராக இருக்கும்.


சரி செவ்வாயின் ஒளிக்கதிர்கள் எப்படி உருவாகின்றன என்பதை பார்த்தால் பூமியில் போல, செவ்வாயிலும் இந்த ஒளிக்கதிர்கள் சூரியனிடமிருந்து வரும் மின்னழுத்தமான அயன்கள் (ions) காரணமாக உருவாகின்றன.


இந்த அயன்கள் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்திற்குள் நுழைந்து, அதன் அடுக்குகளுக்குள் புகுந்து செல்கின்றன.


கிரகத்தின் செதிலான புவியதிர்ப்பு மண்டலத்தால் உருவாக்கப்படும் காந்தப் புலங்கள் (magnetic fields) இந்த அயன்களை இயக்குகின்றன.


இந்த அயன்கள் ஆக்ஸிஜன் அணுக்களை வெளியேற்றும் போது, செவ்வாய் வானில் ஒளிக்கதிர்கள் தோன்றுகின்றன.



செவ்வாயின் புவியதிர்ப்பு மண்டல மாற்றம் & அதன் தாக்கம்ஒரு காலத்தில், செவ்வாய் கிரகத்திற்கும் பூமியின் போல் ஒரு அடர்த்தியான வளிமண்டலம் இருந்தது. இதன் காரணமாக, செவ்வாயின் மேற்பரப்பில் நீர் நிலைத்திருந்தது.


பூமியில் போலவே, செவ்வாய் கிரகத்திற்கும் ஒரு ‘டைனமோ’ (Dynamo) விளைவு இருந்தது.ஆனால், செவ்வாய் கிரகத்தின் உட்கரு (core) வேகமாக குளிர்ந்து விட்டதால், அதன் புவியதிர்ப்பு மண்டலம் மட்டுப்படுத்தப்பட்டது.


இதனால், வளிமண்டலம் காலப்போக்கில் மறைந்து, இன்று காணப்படும் வெறிச்சோடியான நிலையானது உருவாகியது.



இதேவேளை கடந்த வாரம், UAE இந்த ஒளிக்கதிர்களைப் பற்றிய அபூர்வமான தகவல்கள் செவ்வாயை புதிய கோணத்தில் புரிந்துகொள்ள உதவுகின்றன என்று தெரிவித்தது. 


மேலும், ‘ஹோப்’ probe மூலம் சேகரிக்கப்பட்ட அனைத்து அறிவியல் தரவுகளும் செப்டம்பர் மாதம் பொதுமக்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவருக்கும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்