வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் பலி

 

Tamil lk News

 வவுனியாவில்  இடம்பெற்ற கோர விபத்தில் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர்  உயிரிழந்துள்ளமை  துயரத்தை  ஏற்படுத்

.

கொழும்பில் இருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


 இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தைப் பகுதியில் இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.



 தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.



 காரில் பயணித்த மூன்று பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



காரின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காரில் பயணம் செய்துள்ளனர், மேலும் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil lk News

Tamil lk News




Tamil lk News

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்