அழகு ராணி இறுதிப் போட்டியில் இலங்கை அழகி தெரிவு

 

Tamil lk News

 மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியில் இறுதிப் போட்டியாளராக, இலங்கை அழகி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இலங்கையின் அழகு ராணியான அனுதி குணசேகர இந்த போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



 இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் மிஸ் வேர்ல்ட்( உலக அழகு ராணி) போட்டியின் ஒரு பகுதியான, மிஸ் வேர்ல்ட் டெலண்ட்(திறமை) போட்டியிலே அவர் இறுதிப் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



 ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய சுமார் 100 போட்டியாளர்களில் அனுதி குணசேகராவும் ஒருவராக போட்டியிட்டார்.



இந்த நிலையில், அனுதி குணசேகர உட்பட 24 சிறந்த இளம் பெண்கள், டேலண்ட் சவால் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்