தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்றையதினம் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் மத்திய வானிலை நிலையத்தை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் 30.9 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது
சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



