இன்று நள்ளிரவு முதல் மின்சார கட்டணம் 15% அதிகரிப்பு!

Tamil lk News

  மின்சாரக் கட்டணங்களில் 15 சதவீத அதிகரிப்பை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் (PUCSL) புதன்கிழமை (11) அறிவித்துள்ளது.


இந்த அதிகரிப்பு, 2025 ஜூன் 12, முதல் அமலுக்கு வரும்  2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருந்தும் திருத்தப்பட்ட கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.



 025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



 அதன்படி இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்