லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து ; வெளியான மேலதிக தகவல்....!

  இந்தியாவின் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற  ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று(12) பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.


ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது. புறப்பட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


 இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்துள்ளது.

Tamil lk News


இதனால் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து நடந்த இடத்தில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

மீட்புப் பணிகள்

தகவலறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆமதாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.


ஆமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயணித்தவர்களின் நிலை குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதேவேளை விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்