வவுனியாவில் மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடு! துணை முதல்வர் அதிரடி உத்தரவு!!

  

Tamil lk News

வவுனியா(Vavuniya) மாநகரசபைக்கு உரித்தான மாடு வெட்டும் தொழுவத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதை அனையடுத்து அதனை நேரில் சென்று அவதானித்த மாநகர துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.


திடீர் விஐயம் மேற்கொண்ட மாநகர துணை முதல்வர் மாடு வெட்டும் இடத்தில் சுகாதார சீர்கேடுகள் நிலவுவதினை அவதானித்ததுடன் அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகரசபை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தமையுடன், 

Tamil lk News


அங்கு நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்படும் சிசிரிவி கமெராக்களை உடனடியாக திருத்தி அதன் காட்சிகளை மாநகரசபை அலுவலகத்திலுருந்து பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்



மேலும் மாடு வெட்டும் இடத்தில் பணியாற்றும் நபர்களிடம் கலந்துரையாடிய துணை முதல்வர்,



தினசரி வெட்டப்படும் மாடுகள் விபரம் மற்றும் வெளி மாவட்டத்திற்கு ஏற்றப்படும் மாடுகளின் விபரங்களை கேட்டறிந்து கொண்டமையுடன், எதிர்காலங்களில் எவ்வாறான திடீர் விஐயங்கள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்திபன் தெரிவித்திருந்தார்.


News Thumbnail
இஸ்ரேலின் முக்கிய கட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி அதிரடி காட்டும் ஈரான்


புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்