கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த யாழ்.மாநகர சபையினர்: வீதியால் செல்லும் மக்கள் அவதி!!

Tamil lk News

  மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.


குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும், அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

tamil lk News


 அந்தவகையில் இன்றையதினம் குப்பை மேட்டுக்கு தீ வைத்ததன் மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.



மாநகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகிய போதும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செய்வது மக்களை பற்றிய அக்கறை இல்லாத தன்மையை எடுத்துக் காட்டுகின்றது என மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்