தலைகீழாக கவிழ்ந்த வேன் ; மட்டகளப்பில் சம்பவம்!!

 

tamil lk News

ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை(10)  காலை தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள நீரோடையில் கவிழ்ந்துள்ளது.



 கொழும்பு பகுதியில் இருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி வந்த வேன் ஒன்றே இவ்வாறு தலைகீழா கவிழ்ந்துள்ளது.



வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.



 வேனில் பயணித்தவர்கள் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்