யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டம்!

 

 

Tamil lk News

குருந்துார் மலை விவசாயிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.


குறித்த போராட்டம், நேற்றையதினம்(04.06.2025) யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.



குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



 தன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலியா, இந்த மண் எங்களின் சொந்தமண், பண்பாட்டு இனப்படுகொலையை நிறுத்து என கோஷமிட்டு பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்