ஜூலை 1 முதல் பேருந்து சாரதிகளுக்கு சீட் பெல்ட் கட்டாயம் – மீறினால் கடும் நடவடிக்கை!

  பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை கட்டாயம் அணிய வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகிறது.

Tamil lk News


சட்டத்தை மீறும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழுத் தலைவர் பி.ஏ. சந்திரபால எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மோட்டார் வாகனச் சட்டத்தின் விதிகளின்படி, வாகன சாரதிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் 2011 ஒக்டோபர் 1 முதல் அமுலில் உள்ளது. 



இருந்தாலும், நடைமுறையில் பின்பற்றப்படாததால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்