Kilinochchi News
கிளிநொச்சி- இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(20) இராணுவ உயர் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இராணுவ சிப்பாயிடமிருந்து 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளை பகுதியில் பயங்கரம்; கொடூரமாக கொல்லப்பட்ட குடும்பஸ்தர்
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நாளை (21) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.