மந்திரிமனையை பார்வையிட்டார் சிவஞானம் சிறீதரன் எம்.பி

  

Tamil lk News

யாழ்ப்பாண(Jaffna) இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று (18) பார்வையிட்டார்.

Tamil lk News


 தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.



 ஜமுனா ஏரி மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



 பாராளுமன்ற உறுப்பினருடன் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பந்துல ஜீவ புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் நல்லூர் யாழ்ப்பாண வலயத்தின் உத்தியோகத்தர் மணிமாறன் கனியவள அளவையியலாளர் அமர்நாத் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்