2 வயது சிறுவன் நீரில் மூழ்கிய பலி - அம்பாறையில் சோகம்!!

Tamil lk News
  

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 



தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகில் உள்ள ஆற்றில் விழுந்த நிலையில்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



குறித்த விபத்தில் 2 வயதுடைய  சிறாஜ் முகம்மட் ஸயான் ஸகி என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.



சம்மாந்துறை நீதிமன்ற  நீதிவான் டி.கருணாகரனின்  உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், மரண விசாரணை மேற்கொண்டு சடலத்தை உறவினரிடம்  நேற்று  மாலை  ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.



இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்