17ஆவது ஆசிய கிண்ண டி 20 கிரிக்கெட் போட்டி டுபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் அபுதாபியில் இன்று நடைபெறவுள்ள 3 ஆவது லீக் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் - ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹொங்கொங் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியை தழுவி உள்ளது. மறுபுறம் பங்களாதேஷ் அணிக்கு இதுதான் முதல் போட்டி ஆகும். எனவே முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.