காஸாவை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தும் இஸ்ரேல்!!

  

Tamil lk News

காஸாவை முழுமையாக கைப்பற்றும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் இஸ்ரேல் நடத்தி வருகிறது.


 இந்தநிலையில், 2023 ஒக்டோபரில் நடந்த எல்லை தாண்டிய தாக்குதலின் போது, இரண்டு இஸ்ரேலிய பணயக் கைதிகளை காட்டும் காணொலியை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.




 காணொலியில் காட்டப்படும் பணயக்கைதி ஒருவர், தாம் உட்பட 8 பேர், தொடர்ந்தும் ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.




ஹமாஸால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் 48 பண யக்கைதிகளில் இவர்கள் இருவரும் அடங்குகின்றனர்.




 எனினும் அவர்களில் 20 பேர் உயிருடன் இருக்கின்றனர் என கருதப்படுகிறது.




இந்தநிலையில் இந்த காணொலி வெளியானதன் பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காணொலியில் காட்டப்பட்ட இரண்டு பணயக்கைதிகளின் பெற்றோருடனும் கலந்துரையாடினார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்