இலங்கை வானில் தென்பட்ட சிவப்பு நிறத்தில் நிலா!

  திருகோணமலை -மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சூரிய கிரகணத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாக காணக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியது.


அந்த வகையில் இரவு 10.00 மணி தொடக்கம்  11.30 மணிவரையில் தோப்பூர் பிரதேசத்தில் சூரிய கிரகணம் இடம்பெற்ற காட்சியே இதுவாகும்.

Tamil lk News


இந்நிலையில் இலங்கையின் பல இடங்களில் நிலா சிவப்பு நிறத்தில் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 



இதனை பார்வையிட்ட மக்கள் புகைப்படம் எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Tamil lk News


மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 



அதன்படியே கட்டாரிலும் இந்த சிவப்பு நிலா தென்பட்டதாக சிலர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். 



சந்திரக் கிரகணத்தை 2028 ஆம் ஆண்டு வரையில் இலங்கை மக்கள் காணமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்