களுவாஞ்சிக்குடி வாகன விபத்தில் சிறிநேசன் எம்.பி படுகாயம்!

  மட்டக்களப்பு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பயணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் மோதி விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Tamil lk News


அம்பாறை ஆலையடிவேம்பில் இன்று இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு இன்று காலை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டுவிட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் மணியளவில் வாகனத்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினரது வாகனத்துடன்  மோதி விபத்துக்குள்ளானது.




இதில் பிரயாணித்த நாடாளுமன்ற உறுப்பினரது கை தோள்பட்டையை விட்டு விலகி படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்றுவருகின்றது.




இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்