சீனத் தூதுவரை தொடர்ந்து ரணிலை திடீரென சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம்(13) கொழும்பிலுள்ள ரணிலின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. 


சீனத் தூதுவரை சந்தித்த மறுநாளே இந்தியத் தூதுவரும் ரணிலைச் சந்தித்திருப்பது கொழும்பு (Colombo) அரசியலில் பேசுபொருளாகியுள்ளது.


இந்தச் சந்திப்பில் மேற்படி இருவரைத் தவிர வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை. 

Tamil lk News


கிடைத்த உள்ளகத் தகவல்களின்படி, இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிகிறது. 



நேபாளத்துக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ள ரணில் அதற்கு முன்னதாக இந்தியாவுக்கும் பயணிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்