தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

  

Tamil lk News

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனது மக்கள் தொடர்பகத்தில் இன்று (15) இடம்பெற்றது.


 குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.



 அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.



 இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Tamil lk News

Tamil lk News

Tamil lk News

Tamil lk News






Previous Post Next Post
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்