சிலாபம் - தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் 5 பேர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.



