திருகோணமலை வெருகல் - பூநகர் பகுதியில் மழை வேண்டி மனித கொடும்பாவி எரிக்கும் பாரம்பரிய நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
நாட்டில் தற்போது மழை இல்லாத காரணத்தினால் மழையை நம்பி செய்கை பண்ணிய மானாவாரி வேளாண்மைகள் கருகி வருகின்றனர்.
இதனால் திருகோணமலை வெருகல் - பூநகர் பகுதியில் பாரம்பரிய முறைப்படி ஒப்பாரி பாடல்பாடி மனித கொடும்பாவி இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கும் நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது.
இதில் வெருகல் -பூநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மனித கொடும்பாவியை வீதிகளில் இழுத்துச் சென்று, ஒப்பாரி பாடல்கள் பாடி தீயில் எரிக்கும் பாரம்பரிய நிகழ்வை செய்தனர்.
மனிதன் செய்த பாவத்திற்காகத்தான் மழை பெய்யாமல் வேளாண்மைகள் கருகிப் போவதாக நம்பி இவ் பாரம்பரிய நிகழ்வு இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.



