டெல்லியில் செங்கோட்டை அருகே வெடிப்பு சம்பவம்; ஒருவர் பலி - பலர் காயம்!!

 

Tamil lk News

 இந்திய தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே இன்று மாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.


செங்கோட்டை மெட்ரோ தொடரந்து நிலையத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சிற்றூந்தொன்றில் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



இந்தச் சம்பவத்தால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் மூன்று முதல் நான்கு வாகனங்களுக்கு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.



தீயணைப்பு பணிகளுக்காக சம்பவ இடத்துக்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


வெடி விபத்துக்கான காரணம் மற்றும் அதன் தன்மை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்