கோவாவில் ரஜினிகாந்தை கௌரவிக்கும் திரைப்பட விழா

Tamil lk News


  கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. 

 

இது உலகளாவிய திரைப்படங்களையும், உள்ளூர் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. 

 

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா, கோவாவில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 

 


இதில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. 

 

இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளதைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. 

 


அத்துடன் சிறந்த நடிப்புக்கான விருதுகளும் பிரபலங்களுக்கு வழங்கப்படுகிறது.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்