நாவலப்பிட்டி பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மீது இன்று (28) மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்த மனைவி, மாமியார் மற்றும் மூன்று மாத குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாவலப்பிட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர்களை மீட்க முடியவில்லையென குறிப்பிட்டுள்ளனர்.
இறந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் தங்குமிட முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்



