அமெரிக்காவின் நிவாரண உதவி பொருட்களுடன் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்றைய தினம் காலை அமெரிக்க விமானப்படையின் விமானம் வந்தடைந்தது.
'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவ்வாறு அமெரிக்க விமானப்படையின் விமானம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்நிலையில் நேற்றையதினமும் அமெரிக்க விமானப்படையின் இரண்டு சி-130 ரக விமானங்கள் இலங்கையை வந்தடைந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்த விமானங்கள் விசேட பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய திறன்களுடன் வந்துள்ளன.


