அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி!



அமெரிக்காவில் கலிபோர்னியா நகரமான மொனெட்டரி பார்க்கில் துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது கலிபோர்னியா நகரமான மொனெட்டரி பார்க்கில் லூனார் புதுவருட கொண்டாட்டங்களுக்கான நிகழ்ச்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 10 பேர் கொல்லப்பட்டும் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் செய்து தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி பிரயோகத்தின் சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை
மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்