வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்களிடம் உரையாடிய போது இது குறித்து தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் மழையுடன் ஆரம்பித்துள்ள பல நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். இதற்கான உதாரணம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை குறிப்பிடலாம் என்றார்.
உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலுக்கான தமிழரசு கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை.
முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எம்மால் 76 வட்டாரங்களில் வெற்றியடைய முடிந்தது இம்முறை 100-க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் தமிழரசு கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது. அதற்கான ஆதரவும் ஒத்துழைப்பும் தேவையான தெரிவித்தார்.
அடிப்படையில் யாழ்ப்பாண மேயர் தேர்வு இடம்பெற்று இருக்கின்றது என நான் நம்புகிறேன்.உள்ளூராட்சி மன்றத்தின் சுற்றுநிருபம் படி இரண்டு முறைகள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்ல முடியாது அதே போன்று பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்கு போட்டியிட கூடாது என்ற சுற்றுநிறுபம் இருக்கிறது.
கடந்த காலங்களில் பங்காளி கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டபோது அதில் ஆட்சி அமைப்பதற்கான பல்வேறு சிக்கலுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது ஆனால் இம்முறை எந்த ஒரு ஒட்டுக்குழுக்களின் ஆதரவுகளும் இல்லாமல் ஆட்சி அமைக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கான ஆதரவை அனைவரும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.



