நேற்று இரவு (20) நுவரெலியா - நானுஓயா,ரதஎல்ல இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பவம்
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த சுற்றுலா பேருந்தும் வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் மோதியதாலே விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது வேனில் பயணித்த ஆறு பேரும் மற்றும் சக்கரக்வண்டியின் சாரதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த வேணில் பயணித்த தந்தை, தாய், இரு பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் சாரதி ஆகியோர் ஹட்டன், டிக்கோயா பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், ஆட்டோ சாரதி மாத்திரம் நானுஓயா பகுதியை சேர்ந்தவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் சுற்றுலா பயணத்திற்காக கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை நுவரெலியாக்கு சென்ற பேருந்து மீண்டும் கொழும்பை நோக்கி பயணித்த போதே இந்த கோரா விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேருந்தின் அதிவேக காரணமாக 'பிரேக்' செயல்படாமல் போனதால் வேன் மற்றும் முக்சக்கரக்வண்டியுடன் விபத்துக்கு உள்ளாகியதும் பேருந்து சுமார் 50 அடி வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை இவர்களை மீட்கும் பணியில் பிரதேச மக்களும், பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் பணிப்புரை
இந்த விபத்தின் போது காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் மற்றும் காயம் அடைந்தவர்களை விமான மூலம் கொழும்புக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை எடுத்துள்ளார்.
விபத்தின் போது உயிரிழந்தவர்கள் விபரம்
1. அப்துல் ரஹீம் (55)
2. ஆயிஷா பாத்திமா (45)
3. மரியம் (13)
4. நபீஹா(08)
5.ரஹீம்(14)
6. தேவராஜ் பிள்ளை (25) வேன் சாரதி
7. சண்முகராஜ் (25) முக்சகாகர வண்டி சாரதி





