ரசிகர்கள் மத்தியில் இன்னும் அழியாத நகைச்சுவை மன்னனாக வலம் வரும் மூத்த கலைஞர்மான நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் திரையுலத்தில் தடம் பதிக்கிறார்.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் மதுரை செல்வம் தயாரிக்கும் இரண்டாவது படமான ''பழனிசாமி வாத்தியார்''இந்த திரைப்படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கின்றார் மற்றும் அவர்களுடன் இந்த புகைப்படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, சதீஷ் குமார், நந்தகோபால் ஆகியோரம் மற்றும் பலரும் இதில் நடிக்கின்றார்கள்.
இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக கவுண்டமணி நடித்ததால் இந்த திரைப்படத்திற்கு முன்னணி நடிகர் ஒருவரை சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த திரைப்படம் முழுக்க நகைச்சுவையாக இருப்பதால் மற்றும் கவுண்டமணி கதாநாயகனாக நடிப்பதால் திரைப்பட விநியோகஸ்தர்கள் இடையிலான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.



